விஜயின் படத்திற்காக போடபடும் பிரமாண்ட பாலம்
விஜயின் படத்திற்காக போடபடும் பிரமாண்ட பாலம்.
சென்னை பின்னி மில்லில் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது, தற்போது சென்னை பிரபல ஸ்டுடியோ-வில் நேப்பியர் பாலம் போல மிகப்பெரிய அளவில் செட் ஒன்று போடபட்டு வருகிறது.
நேப்பியர் பாலம் போல் செட் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது மற்றும் இந்த பாலம் மையப்படுத்தி எடுக்கப்பட போகும் காட்சி படத்தின் முக்கியமான காட்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
விஜயின் தீவிரமான ரசிகை தான் AGS நிறுவன CEO அர்ச்சனா கல்பாத்தி s. தளபதி 63 படத்தின் பட்ஜெட் மட்டும் 120 கோடி என்று கூறப்படுகிறது. மிக தத்ரூபமாக உருவாகி வரும் நேப்பியர் பாலம் அமைக்க மட்டும் பல கோடி என்று படத்தின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
நேப்பியர் பாலம் அமைப்பது நமக்கு நன்கு அறியப்பட்ட ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் தான் தளபதி 63 படத்தின் ஆர்ட் டைரக்டர் ஆக வேலை செய்கிறார், இவர் சங்கரின் என்திரன், 2.0, நண்பன், அட்லின் தெறி, மெர்சல், மற்றும் தமிழ் திரைப்படத்தில் நிறைய மிக பெரிய படங்களுக்கு ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் தான், என்பதும் குறிப்பிடத்தக்கது.
தளபதி 63 படம் ஸ்போட்ஸ் திரில்லர் ஆக தயாராகி வருகிறது, அனைவரும் அறிந்ததே இதில் விஜய் ஃபுட் பால் பயிற்சியாளர் ஆகவும்
ஃபுட் பால் விளையாட்டு வீரர் ஆகவும் நடிப்பதால் இந்த படத்திற்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொதுவாக விஜய் படம் என்றாலே படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும், இந்தமுறை ஃபுட் பால் விளையாட்டு வீரர் ஆக நடிக்க இருப்பதால் படத்தின் சூட்டிங் நடைபெறும் நிலையில் இருந்தே எதிர்பார்ப்பு விண்ணை முட்டும் அளவுக்கு அதிகமாக உள்ளது என கூறினாள் கூட மிகையாகாது.
விரைவில் தளபதி 63 படத்தின் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்புக்கு மிகப்பெரிய அளவில் நேப்பியர் பாலம் போல் போடபட்ட வரும் செட்டில் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Comments
Post a Comment