NGK படத்தின் டீசர் காதல் பரிசாக பிப்ரவரி 14 வருகிறது.

செல்வராகவன், NGK படத்தின் டீசர் காதல் பரிசாக பிப்ரவரி 14 வருகிறது.

நீ‌ண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் சூர்யா நடிக்கும் NGK படத்தின் டீசர் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது படக்குழு.

செல்வராகவன்
செல்வராகவன் இயக்கிய நிறைய படங்கள் கிடப்பில் இருந்தாலும், NKG படம் ரிலீஸ் ஆகும் என்று கூறியுள்ளார், இந்த நிலையில் சூர்யா ரசிகர்கள் நீண்ட நாட்களாக NGK படத்தின் Update கேட்டுகொண்டே இருந்த நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு ட்ரீம் வாரியர்ஸ் வெளியிட்டன.

சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியானது.

நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்ததால் அனைவரிடத்திலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
NGK படம் அரசியல் சம்பந்தம் படுத்தி எடுக்க பட்ட படம் என்பது பட பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த புகைப்படங்கள் தெளிவாக காட்டியது.

செல்வராகவன் படம் என்றாலே தனித்துவமான திரைகதை, இயக்கம் என அவருக்காகவே படம் பார்க்க செல்லும் ரசிகர்கள் உள்ளனர் அதில் நானும் ஒருவன்,

சூர்யா
இதற்க்கு முன்பு வெளியான சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா ரசிகர்கள் மற்றும் சூர்யாவும் அதிகமாக எதிர்பார்த்து இருகும் NGK படம் பெரிய அளவில் வெற்றி பெற engineeringfilms சார்பாக வாழ்த்துக்கள்.

நாட்கள் கடந்து போனாலும் சூர்யாவின்  கட்டுமஸ்தான உடல் அமைப்பினை அவர் தொடர்ந்து பயிற்ச்சி எடுத்து அதே போல உடல் எடையை மற்றும் உடல் அமைப்பையும் தக்கவைத்து வருகிறார்.

பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று டிவிட்டர் பக்கத்தில் இந்தியா அளவில் சூர்யா ரசிகர்கள் டிரெண்ட் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

-engineering Films



Comments