"விஜய்" பிறந்தநாள் அன்று "தளபதி64 - அறிவிப்பு"

விஜய் பிறந்தநாள் அன்று தளபதி64 அறிவிப்பு

தளபதி 63 படத்தின் சூட்டிங் விறு விறுப்பாக நடைபெற்று வரும் இந்த நேரத்தில் தளபதி 64 படத்தின் டைரக்டர் இவர் தான் என்ற சில டைரக்டர்கள் பெயர் அவ்வப்போது வந்து கொண்டு இருந்ததது.

மோகன் ராஜா ஒரு கல்லூரியில் கெஸ்ட் லெக்சர் கொடுக்கும் வகையில் செல்லும் போது வேலாயுதம் படத்தில் தான் நான் முதன் முதலாக சமூக அக்கறை கொண்ட படங்கள் இயக்க ஆரம்பித்தேன் மறுபடியும் விஜய் உடன் வேலை செய்ய போகிறேன் என்று கூறி இருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் viral ஆக பரவ ஆரம்பித்தது. இதனிடையே சமூக ஊடகங்கள் தளபதி 64 படத்தின் டைரக்டர் மோகன் ராஜா தான் என்று கூறி வரும் நிலையில் இதனை பற்றி விசாரிக்கும் போது தளபதி 64 படத்தின் டைரக்டர் யார் என்பதை முடிவு செய்து வரும் ஜூன் 22 ஆம் தேதி அன்று தளபதி 64 படத்தின் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தற்போது கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

தளபதி விஜயின் பிறந்தநாள் என்றும் இல்லாமல் இந்த வருடம் வெகு சிறப்பாக கொண்டாட விஜய் முடிவு செய்துள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

சக நடிகர்கள் அனைவரையும் விஜய் பிறந்தநாள் அன்று ஒன்று கூடுவார்கள் என்ற பேச்சுக்கள் இப்போது ஆரம்பித்துள்ளது.

விஜய் பிறந்தநாளில் தளபதி 64 படத்தின் டைரக்டர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைகும்.


Written and posted by
Engineering Films jeeva


Comments